கட்டை விரல்
கேட்டபோது கூட
கஷ்டப் பட்டதில்லை
எங்கள் ஏகலைவன்கள்!
இன்று தலையோடு
சேர்த்துத் தன்
தகப்பன் தலையையும்
தட்சணையாய்க் கேட்கும்
துரோணாச்சாரியார்கள்
ஆனதென்ன கல்விக் கூடங்கள்!
இந்திய அரசே!
இந்திய அரசே!
கல்வி எங்களுக்குப்
பிறப்புரிமை!
கண்டபடி உயரும்
கல்விக் கட்டணத்தால்
எம்மைப் போல்
ஏழைகளுக்கு
எட்டாக் கனியாக்கிவிடாதே
கல்வியை!
கார்ப்பரேஷன் பள்ளிவரை
கஷ்டப் பட்டு
படித்து விடுகிறோம்!
எதிர்காலக் கல்விக்காய்
நாங்கள்
ஆசைப் படக் கூடாதா!
வருங்கால விஞ்ஞானிகள்
ஆகும் வாய்ப்பு
எங்களுக்கும் இருக்கிறது!
பத்தாம் வகுப்போடும்
பண்ணிரெண்டாம் வகுப்போடும்
மூட்டை கட்டி வைக்க
வேண்டுமா
எங்கள் கனவுகளை?
எத்தனை பேர்
எத்தனை பேர்
பன்னிரெண்டாம் வகுப்போடு
கல்விக்கு முழுக்குப்
போடுகிறோம்!
கல்வி எங்களுக்கு
கசந்து போயிற்றா?
அல்லவே!
கட்டுவதற்கு இருக்கும்
மாற்று உடுப்பைக்
கூட
விற்றுத்தான்
தொடரவேண்டுமா
எங்கள் மேல்படிப்பை?
Sunday, January 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Hello
Happy!!!. Welcome back.
Post a Comment